Header Ads

Header ADS

ஏலியன்களின் விண் கல துண்டு இது தான்: முதன் முறையாக பரிசோதனைக்கு உட்படுத்த உத்தேசம் ...



சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர், பிரித்தானியாவில் நெருங்கி வீழ்ந்ததாக சொல்லப்படும், சில்ஃப்போ மோர் என்னும் பறக்கும் தட்டின் பாகங்களை ஆராய முதல் முறையாக விஞ்ஞானிகள் எத்தணித்துள்ளார்கள். சிறிய 7 அங்குல நீளமுள்ள உலோகத் துண்டு, இது நாள் வரை(60 வருடங்களாக) பாதுகாக்கப்பட்டு வந்தது. வெறும் 7 அங்குல துண்டாக இருந்தாலும் அதன் எடை சுமார் 14 கிலோ கிராமாக உள்ளது என்பது அதிசயமான விடையங்களில் ஒன்று.

இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்ட, 2 உலோகத் துண்டுகளை தற்போது ஆரய விஞ்ஞானிகளுக்கு பிரித்தானிய அரசு அனுமதி கொடுத்துள்ளது. குறித்த ஏலியன்களில் பறக்கும் தட்டு , சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியாவில் வீழ்ந்துள்ளது. அன்று முதல் கொண்டு, அதன் சில பாகங்களை சிலர் கைப்பற்றி அதனை பாதுகாத்து வந்தார்களே ஒளிய. அதனை அவர்கள் அரசிடம் கொடுக்கவில்லை.

ஆனால் ஊர் மக்கள் சிலர் 2 உலோகத் துண்டுகளை கண்டெடுத்து அருங்காட்சியகத்திடம் கொடுத்தார்கள். இவை பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வந்தது. இன் நிலையில் இதனை ஆராய விஞ்ஞானிகள் அனுமதி கோரி , தற்போது ஆராட்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். 

No comments

Powered by Blogger.