Header Ads

Header ADS

மஹிந்தவுடன் இணைய, 7 அமைச்சர்கள் முடிவு.. விரைவில் அரசியல் திருப்பம்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகிக்கும் அமைச்சர்கள் சிலர் இராஜினாமா செய்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணையவுள்ளதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.

தேசிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை வகிக்கும் சுதந்திரக் கட்சியின் 7 அமைச்சர்கள் இவ்வாறு இராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக அறியமுடிகின்றது.

இரண்டு வருடங்களாக ஒத்திவைக்கப்பட்டுவந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நேற்று சனிக்கிழமை நடந்துமுடிந்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகிவருகின்றன.

இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முதலிடத்தை பிடித்திருப்பதோடு, ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்றாவது இடத்திலும், 4ஆவது இடத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் காணப்படுகின்றது.

இந்நிலையில் தன்னுடன் இணைந்துகொள்ள விருப்பமானவர்களுக்கு கதவு எப்போதும் திறந்தே வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கின்ற நிலையில், சுதந்திரக் கட்சிக்குள் ஏற்கனவே அதிருப்தியடைந்திருந்த 7 அமைச்சர்களே இவ்வாறு இணைந்து கொள்வதற்கான சமிக்ஞையை மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கியிருப்பதாக அக்கட்சியின் உள்ளகத் தகவல் தெரிவிக்கின்றது.

வெகுவிரைவில் ஸ்ரீலங்கா அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்படலாம் என்று மற்றுமொரு தகவல் கூறுகின்றது.

No comments

Powered by Blogger.