கிராண்ட் காலர் விருது பெற்றார் பிரதமர் மோடி..
பாலஸ்தீனத்தில் வெளிநாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக கருதப்படும் கிராண்ட் காலர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக பாலஸ்தீனம், யு.ஏ.இ. ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று ஜோர்டான் சென்ற அவர், தலைநகர் அம்மானில் அந்நாட்டு மன்னர் இரண்டம் அப்துல்லாவை அரண்மணையில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து, ஜோர்டானிலிருந்து கிளம்பி பாலஸ்தீனத்தின் ரமல்லா நகருக்கு சென்ற மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. யாசர் அராபத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மோடி, அந்நாட்டு அதிபர் முகமது அப்பாசை சந்தித்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதையடுத்து, வெளிநாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாலஸ்தீனத்தின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் காலர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில்; எனக்கு வழங்கப்பட்ட விருது அனைத்து இந்தியர்களையும் கவுரவிப்பது போன்றது. இந்தியாவுக்கு பாலஸ்தீனம் பெருமை சேர்த்துள்ளது. இந்திய வெளியுறவு கொள்கையில் பாலஸ்தீனத்திற்கு முக்கிய இடம் உள்ளது. துணிச்சலுக்கு உதாரணமான இந்நாட்டு மக்கள், மகத்தான தியாகங்களை செய்துள்ளனர். பாலஸ்தீனம் அமைதியான நாடாக திகழும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

No comments