Header Ads

Header ADS

தேர்தல் முடிவுகளின் எதிரொலி.. தமிழ் கட்சிகளுக்கு சுமந்திரன் அழைப்பு..

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கில் 40 சபைகளை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன் யாழ் மாவட்டத்தில் 13 சபைகளை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிலையில் தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு  சுமந்திரன் அழைப்பு

இதற்கமைய இலங்கை தமிழரசுக் கட்சி 56 சபைகளில் போட்டியிட்டதாகவும் அதில் 40 சபைகளை கைப்பற்றியுள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன் உள்ளுராட்சி சபை மூலம் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக, சமஷ்டி அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தும் தமிழ் கட்சிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.